அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

SHARE

குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் ஓகா இடையே நாட்டின் மிகவும் நீளமான 2.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.979 கோடியில் கட்டப்பட்டுள்ள கேபிள் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதனை தொடர்ந்து துவாரகாவில் கடலுக்குள் மூழ்கி இருக்கும் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

இந்நிலையில், அங்கு அப்படியொரு கோயிலே இல்லை என்று தொல்பொருள் ஆய்வாளரான புட்டாசாமி குடிகார் பதிவு செய்துள்ளார்.

கோவாவில் இயங்கி ’சில்பலோகா’ அமைப்பின் இயக்குநராக பணியாற்றி வரும் மூத்த கடல்சார் தொல்லியலாளர் மற்றும் ஆய்வாளரான புட்டாசாமி குடிகார், தனது முகநூலில் வெளியிட்டுள்ளதாவது, “நான் துவாரகா கடல் தொல்பொருள் ஆய்வில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பங்கேற்றேன். கூடுதலாக கடலோர அகழ்வு மற்றும் கணக்கெடுப்பிலும் தீவிரமாக பணியாற்றினேன். கடற்கரையில் தொல்பொருள் ஆய்வு பரபரப்பாக நடந்தது. துவாரகா மற்றும் பேட் துவாரகாவில் (கடலடி ஆய்வு) சுமார் 5 மணி நேரம் ஆய்வில் பங்கேற்றேன்.

துவாரகா பண்டைய காலம். அதனால் நிறைய கல் நங்கூரங்கள் (stone anchors), கட்டிட கல் குவியல்கள் கிடைத்தன. ஆய்வு காலத்தில் அதே கல் துண்டுகளை சேர்த்து செயற்கை சுவர்கள் கட்டப்பட்டது!! அங்கு எந்த கோயில் இடிபாடுகளும் காணப்படவில்லை!! யூட்யூபில் வரும் வீடியோ காட்சிகள் 59% போலி செய்திகள் (அனிமேட்டட்)தான்.

எனது 3 வருட ஆய்வில், மகாபாரத காலத்தின் மிச்சங்கள் கிடைத்தால், நாம் பின்வாங்கி இருக்கலாம்!! ஆனால், பொய்யின் உச்சத்தை நோக்கி இந்த நாடு செல்வதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது. இப்போது இதையெல்லாம் அரசியலுக்கு பயன்படுத்துவதைப் பார்த்தால் வாந்தி வருகிறது.என் தேசம் மகத்தானது!” என்று பதிவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Admin

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment