ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

SHARE

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் முதலாவது ஆட்டம் மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறுகிறது.

மும்பை:

ஐபிஎல் டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டம் இன்று மாலை 6 மணி அளவில் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 

கடந்த ஒவ்வொரு ஐ.பி.எல். போட்டிகளின்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேல் ரசிகர்களுக்கு இருந்த பெரிய எதிர்பார்ப்பு இந்த முறை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் தனது மோசமான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு செல்லாமலேயே வெளியேறியதே இதன் காரணம்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை சில முக்கியமான மாற்றங்களோடு களம் இறங்க உள்ளது. அதில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது ரெய்னாவின் வருகை, இதனால் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டிலும் ஆட்டத்தை சென்னை அணியால் தைரியத்துடன் எதிர் கொள்ள முடியும்.  பேட்டிங்கில் மேலும் பலம் சேர்க்க தோனி, ராயுடு, ஜடேஜா, சாம் கரன், மொயின் அலி ஆகியோர் உள்ளனர். டூப்பிளசிஸ், கெய்க்வாட், ஜெகதீசன் ஆகியோரின் ஆட்டமும் களைக்கட்டும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 

பந்துவீச்சுக்காக லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், சாம் கரன், பிராவோ என 5 பேர் மட்டும் இருப்பதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் குறித்த சந்தேகமும் ரசிகர்கள் மனதில் எழ தொடங்கியுள்ளது. இருப்பினும் தோனி என்னும் பெயர் மட்டுமே பெரியதொரு நம்பிக்கையையும் எதிர்ப்பார்ப்பையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. 

இன்றைய போட்டியின் எதிரணியாக இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் புது தலைமையுடன் களம் இறங்க உள்ளது. ரிஷப் பந்த், இந்திய அணியின் விக்கெட் கீப்பர். கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சதம் அடித்து ஆடியவர். ஐபிஎல் தொடரில் கோலி, ஸ்மித், ரெய்னா, ஸ்ரேயாஸ் அய்யர் போன்றோர் வரிசையில் 5வது இளம் வயது தலைவராக ரிஷப் பந்த் பார்க்கப்படுகிறார். கேப்டனாக தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அணியை வழி நடத்த வேண்டும் என்ற தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். புதிய தலைமையோடு தோனியின் ஆட்டத்தை பொருத்திருந்து காணலாம்.

  • சே.கஸ்தூரிபாய் 

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

120 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா!

Admin

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

சுங்கச் சாவடிகள் இருக்காது… சுங்கக் கட்டணம் இருக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு.

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

Admin

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் – நவம்பரில் உச்சமடையும் : வெளியான அதிர்ச்சி தகவல்

Admin

Leave a Comment