கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

SHARE

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை தற்போது அனுமதியளித்துள்ளது.


நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

அதன்படி கோவின் செயலில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றோ கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

இந்தியாவில் 40 கோடி பேரை பாகுபலியாக மாற்றிய தடுப்பூசி.. பிரதமர் மோடி

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

Leave a Comment