Lok Sabha 2024: உணர்ச்சிவசப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்…  யார் இந்த ட்ரெண்டிங் வேட்பாளர் திண்டுக்கல்  முபாரக்?

SHARE

முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, தனது உணர்ச்சிப்பூர்வமான உரையால் கண்கலங்க வைத்துள்ள இவரது வீடியோக்கள்தான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங். வீச்சுமிகு உரைகள், மத நல்லிணக்கத்தின் அடையாளம் என சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களாக ட்ரெண்டில் இருக்கும் இந்த முபாரக் யார்?  

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிதான் திண்டுக்கல். இங்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முகமது முபாரக். 2009ஆம் ஆண்டு முதல் நேரடியான கள அரசியல் செய்து வரும் இவர், சிறுபான்மை மக்களுக்கான அழுத்தமான போராளியாக அறியப்பட்டவர்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை தனது ஊரிலேயே முடித்து MS பல்கலைக்கழகத்தில் இளங்கலை தொழில் நிர்வாகப் படிப்பில் தேர்ச்சி பெற்றார்.  பின்னர், முதுகலை அரசியல் அறிவியலும் படித்தார். 

கல்லூரி காலம் முதலே சமூகப்பணிகளில் ஈடுபாடுள்ள மாணவனாகவே இருந்துள்ளார் முபாரக். இந்தியாவிலேயே அதிகமான சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதியில் பிறந்து அம்மக்களின் சிக்கல்களை நேரடியாக பார்த்து வளர்ந்த முபாரக்குக்கு, சிறுபான்மை சமூக பிரச்னைகளில் மட்டுமன்றி எளிய மக்களின் உரிமை சார் பிரச்னைகளிலும் அதிக கவனம் இருந்தது. அத்துடன் சூழலியல் சார்ந்த பல்வேறு போராட்டங்களை படிக்கும் காலத்திலேயே முன்னெடுத்தார். 

“கூட்டணி அமைத்திருக்கிறோம் என்பதற்காக அவர்களது திட்டங்களை எதிர்க்க மாட்டோம் என்றில்லை. கூட்டணியை விட மக்கள் நலன் முக்கியம் ” என்ற இவரது முழக்கம் பொதுவெளியில் இவரை தலைவர்கள் மத்தியில் தனித்துவமாகக் காட்டியது. 

2009ஆம் ஆண்டு SDPI கட்சி தொடங்கப்பட்டபோது தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார். 8 ஆண்டுகளுக்குப்பிறகு, துணைத்தலைவராக 2 ஆண்டுகாலம் இருந்த இவரை, பின்னர் தலைவராக்கியது எஸ்டிபிஐ.

தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடும் இவரது பேச்சுகளும் அதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

படித்த, சமூகப் பொறுப்பும் அக்கறையுமுள்ள வேட்பாளர் என்று சமூக ஊடகங்களில் கிடைக்கும் வரவேற்பு வாக்குகளாக மாறுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

“நான் ராஜினாமா பண்ற மாதிரி கனவு தான் கண்டேன்” – பின்வாங்கிய பாஜக எம்.பி.

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

மேட்ச் பிக்சிங் இல்ல பர்ச்சேஸ் பிக்சிங் செய்துள்ளது அதிமுக : சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்

’இதெல்லாம் தேவையில்லாத ஆணி’: திருமாவை எதிர்க்கும் முகநூல் வாசிகள்

Admin

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

வீணான இஷான் கிஷனின் சாதனை. வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்…

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment