ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

SHARE

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தட்டின் அடியில் பணம் கொடுத்த காணொலி வைரலானதைத்தொடர்ந்து மேல்நடவடிக்கைக்காக காவல்துரைக்கு இந்த விவகாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வேறொரு கருத்தும் நிலவி வருகிறது.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரசாரத்தின்போது ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக பரவு வீடியோ ஒரு பழைய வீடியோ.

உண்மை : இராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை தொடங்கியபோது நடந்த சம்பவம் அது.

தெரிந்தேதான் கலெக்டர் மூலம் விசாரணைக்கு உத்தரவும் இடப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு இது பழைய வீடியோ என்றும் அண்ணாமலைக்கு எதிராக பரப்பட்டது என்று தேர்தல் ஆணையமே அறிவித்துவிட்டது என்று பிரசாரத்து மைலேஜ் ஏற்றும் ஒரு Notorious Publicityக்கான முயற்சியாக இது பயன்படுத்தப்படலாம்.

ஒட்டுமொத்த கவனமும் இந்த விஷயத்தின் இருக்கும்படி பார்த்துக்கொள்வது, ”அண்ணாமலைக்கு 5 கோடி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த டைரியையும் அதை நீக்க மாட்டேன் என மறுத்த அதிகாரி சுபம் அகர்வாலை அவசர அவசரமாக பணியிட மாற்றம் செய்ததாகவும் சிங்கை ராமச்சந்திரன்” வெளியிட்ட குற்றச்சாட்டை மறைக்கும் முயற்சியாகவும் இருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கை ராமச்சந்திரன் சொன்னது என்ன?

மணல் தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ரெய்டில் கிடைத்த ஆவணத்தில், 5 கோடி ரூபாய் அண்ணாமலைக்கு கொடுக்க வேண்டும் என்று இருப்பதாகவும் அதை மாற்றக்கோரி அண்ணாமலை தரப்பு கேட்டும் மாற்றாத நேர்மையான அதிகாரியை பணியிட மாற்றம் செய்ததாகவும் இது குறித்து வழக்கு பதிவு செய்தால் தான் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேற்கு வங்க அரசியல்: 42 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி

Admin

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – ஹால் டிக்கெட் வெளியீடு

Admin

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சரின் புகைப்படம் வைரல்..!!

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

Admin

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களா? என்ன சொன்னார் சாம் பித்ரோடா

Admin

உளவு மென்பொருளை அரசால் மட்டுமே வாங்க முடியும்: சசி தரூர் குற்றச்சாட்டு

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

Leave a Comment