எச்சில் தொட்டு, வாயால் ஊதி உறைகளைப் பிரிக்கக் கூடாது: சுகாதாரத்துறைச் செயலர் எச்சரிக்கை

SHARE

உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும்போது உறைகளைக் கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதிப் பிரித்தல் போன்ற செயல்களை செய்யக் கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் மார்ச் 25, 2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தவிர்க்க முடியாத காரணங்களால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் சில அத்தியாவசியச் செயல்பாடுகளுக்குத் தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளில் ஒன்றாக அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகைக் கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில், அந்தக் கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

உறைகளை எடுக்கும்போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதால் கொரோனாவை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

90% மக்களிடம் கைபேசிகள்… தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்… – நிதியமைச்சர் சொல்வது சரியா?

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியலை தாங்க ஸ்டாலின்… வானதி சீனிவாசன் போராட்டம்

Admin

பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

Leave a Comment