வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைகின்றது.
எனவே இதற்குப் பின்னர் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யக் கூடாது, மீறினால் அது குற்றமாகக் கருதப்படும். இது குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி,
ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மாலை 7 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும்வரை கட்சிகள் எந்தத் தேர்தல் பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்தக்கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை, வானொலி, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் ஆகியவற்றிலும் தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமும் பிரச்சாரம் செய்யக்கூடாது.
இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது.
இந்த விதிமுறைகளை விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
- நமது நிருபர்