பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

SHARE

வழக்கம்போல கிசுகிசு பேசாதவர்களையும் பேச வைக்க வந்துவிட்டது பிக் பாஸ். அதனால நாமும் பிக் பாஸின் சுவாரஸமான விஷயங்கள் தினமும் பாக்கலாம்..

புதிய பிக்பாஸ் வீடு:

பிக் பாஸ் சீசன் 5 வீடு சும்மா கலர்ஃபுல்லா வேற லெவல்ல இருந்தது. சங்கர் பட பாட்டுக்கு செட் போடுவாங்களே அந்த மாதிரி இருந்தது. எப்பவும் போல வரவேற்பறை, கிச்சன், பெட் ரூம் ஆண்களுக்கு தனியா, பெண்களுக்கு தனியா, டாய்லெட், இத்தோட வெளில உங்காந்து பேச நிறைய இருக்கைகள்லாம் போட்டிருக்காங்க, இந்த சீசனோட வீட்ல அதிகம் மாறி இருக்குறது ஜெயில் தான். நிச்சல் குளத்த பாதாள சிறையா மாத்தி இருக்காங்க.

’வீட்ல எது மாறினாலும் மாறலைனாலும் நான் எப்போதும் மக்களின் பிரதிநிதி தான், உங்கள் நான்’ என்று சொல்லி முதல் நாளில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார் கமலஹாசன். 

யார் அந்த போட்டியாளர்கள்?:

1.இசைவாணி

முதல் போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் இசைவாணி. பெண் கானா பாடகர். இவரது தந்தையும் ஒரு கானா பாடகர். பிபிசியில் தேர்தெடுக்கபட்ட 100 பெண்களில் முதல் தமிழ்ப் பெண். அப்பாவின் இசையால் கவர்ந்து பாடகர் ஆனவர், ஆரம்பத்தில்  வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை, இதனாலேயே நான் யார் என்று நிரூபிக்க வேண்டும் என்று வந்ததாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  

2.ராஜூ ஜெயமோகன்

மிமிக்ரி ஆர்டிஸ்ட். சின்னத்திரை நடிகர். இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த நிகழ்ச்சி தன் அடுத்த கட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். சுருக்கமா சொல்லனும்னா ஃபேமஸ் ஆகணும்னு வந்திருக்கேன்னாரு. அது எந்த மாதிரியான ஃபேபஸ்னு இனிமேதான் தெரியும்.  

3. மதுமிதா

இவர் நம்ம ஊரே இல்லங்க. ஜெர்மனில இருந்து வந்திருக்காங்க. மாடல், ஃபேஷன் டிசைனர். இவங்களோட இலங்கைத் தமிழ் ரொம்பவே நல்லா இருந்தது. மாஸ் மீடியால அடியெடுத்து வெக்கணும்னு ஆசைபட்றதா சொன்னாங்க. முதல்ல வீட்ல எப்படி இருக்காங்கன்னு பாப்போம்.

4. அபிஷேக்

சினிமாப்பையன் என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கபடுபவர். இவருக்கு நிறைய நெகடிவ் கமெண்ட்ஸும் இருக்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸும் இருக்கு. எது நடந்தாலும் ஓகே அந்த மனநிலையில தான் இருக்குறதா சொல்லி இருக்காரு. ஆனா இவரப்பாத்தா பிக் பாஸுக்கு ஏத்த மூஞ்சியா இருக்கு. பாப்போம்.

5. நமீதா

இதுவரை பிக் பாஸ் சீசனில் இல்லாத பாலினத்தவர். ஆம் இவர் திருநங்கை. மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இண்டர்நேஷனலில் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளார். 

6. பிரியங்கா

தெரிந்த முகம். விஜய் தொலைக்காட்சியின் பெண் தொகுப்பாளர். நம்ம வீடுதானே அப்டிங்குறதனாலேயே ஃபீரியா பாட்டு பாடிக்கிட்டே வந்தாங்க. வழக்கம்போல அதே பாட்டு தான் Who’s the Hero.(ஒரே ஒரு பாட்ட கத்துக்கிட்டு இவங்க பண்ற அலப்பறை இருக்கே…). வழக்கம்போல மேடைமேல ஏறினதும், கமல பேச விடாம இவங்களே பேச ஆரம்பிச்சிட்டாங்க. உங்கக்கூட ஆங்கரிங் பண்ணனும்னு கேட்டு பிக் பாஸ் சீசன் 5ய சூப்பர் சிங்கர் பாணில சொல்லிட்டு போனாங்க. சூப்பர் சிங்கருக்கு நிறைய கண்டெண்ட் கொடுத்து இருக்காங்க, பிக்பாஸ்ல கண்டெண்ட் கொடுப்பாங்களா… அல்லது அண்டெண்டாவே மாறுவாங்களா?-ன்னு போகப்போகத் தெரியும்… 

7. அபினய்

ஜெமினி கணேசன் சாவித்திரி தம்பதியின் பேரன். கணிதமேதை இராமானுஜன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தும் இருக்கிறார். டேபிள் டென்னிஸில் நேஷனல் பிளேயர். இந்த பிக் பாஸ் வாய்ப்பு தன் சினிமா கனவிற்கு உதவியாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

8. பாவ்னி ரெட்டி

மாடல், சின்னத்திரை நடிகை. இவரது கணவரின் தற்கொலையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். இந்த பிக் பாஸின் அனுபவம் தன் சொந்த வாழ்வின் சோகத்தில் இருந்து மீட்கும் என்று நம்பிகிறார். ’அதிகமா பேசமாட்டேன், அதுக்காக கோபம் வராதுன்னு இல்ல, எதிர்ல இருக்குறவங்கல பொருத்தது’ன்னு அறிமுகத்துலயே டிஸ்கிளைமர் போட்டு இருக்காங்க… 

9. சின்னபொண்ணு

நாட்டுப்புற இசைப்பாடகர். சினிமாவிலும் நிறைய பாடல்களை பாடியிருக்காங்க. கொரோனா மூலம் ஏற்பட்ட தொழில் சரிவில் இருந்து மீள்வதற்கு பிக் பாஸ் துணையாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார். ஆனா இவங்க பிக் பாஸுக்கு ஏத்த ஆளுன்னு தோணல. பாப்போம். 

10. நாடியா

மலேசியா வாழ் தமிழர். டான்ஸ் ஆடிட்டு வந்தாங்க. சின்ன பொண்ணுன்னு பாத்தா எனக்கு மூனு பொண்ணு இருக்காங்கன்னு ஷாக் குடுத்தாங்க. 

11. வருண்

பழைய நகைச்சுவை நடிகர் ஐசரிவேலனின் பேரன். சினிமா ஆர்வம் மிக்கவர். சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிப்பில் தன்னை மேலும் மெருகேற்ற, ஸ்டண்ட் பயிற்சிகளை கற்று வருகிறார். 

12. இமான் அண்ணாச்சி

சின்னத்திரை பிரபலம். உங்களில் ஒருவர் என்று அறிமுகப்படுத்தினார் கமல். சினிமா வாய்ப்புக்காகவும் இரண்டாவது சுற்றுக்காகவும் வந்திருக்கிறார்.

13. சுருதி

மாடல், கூடைபந்து விளையாட்டு வீரர். தமிழ்க்கடவுள்களை கருமையாக வைத்து சமீபத்தில் எடுத்த புகைப்படங்களின் மூலம் பிரபலமானவர்.

14. அக்ஷரா

மாடல், நடிகை. தெலுங்கில் கதாநாயகியாக நடித்துள்ளார். மாடல் என்பதற்காக இவரை கேட் வாக் செய்ய சொல்லி, மாடல் என்பவரின் வேலை தான் என்ன என்பதை ரசிகர்களுக்கு தெரிய வேண்டும் என்று கமல் இவரை அறிமுகப்படுத்தினார். 

15. ஐக்கி பெர்ரி

தமிழ் ராப் இசைக்கலைஞர். பாக்குறது வெள்ளக்கரங்க மாதிரி இருக்காங்களேன்னு நாம நினைக்குறது கேட்டுச்சோ என்னமோ, நான் தமிழ் பொண்ணு தான். என் ஊர் தஞ்சாவூர்னு அறிமுகப்படுத்திகிட்டாங்க. பேர்ல இருக்க ஐக்கி என்பது ஐக்கியம் என்ற தமிழ்ச் சொல்லின் சுருக்கமாம்.

16. தாமரை செல்வி

கூத்து கலைஞர். இன்னமும் கூத்துக்கெல்லாம் மக்கள் ஆதரவு கொடுக்குறது பெரிய விஷயம்னு சொன்னாங்க. கூத்துக்காக தன் பிள்ளைகளை கூட சரியாக கவனிக்க முடியவில்லை-ன்னும் வருதமும் பட்டாங்க. 

17. சிபி

நடிகர். மாஸ்டர் படத்தின் மூலம் சிறு வேடத்தில் அறிமுகமானவர். தொடர் சினிமா வாய்ப்புகளுக்காக இந்த பிக் பாஸ் பார்ப்பதாக கூறினார். 

18. நிரூப்

சொந்த தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர். சென்னையில் கிளவுட் கிச்சன்வைத்துள்ளதாக கூறினார்.

இறுதியாக வீட்டிற்குள் வந்த 18 போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளை கூறிவிட்டு, இந்த சீசனிலும் புத்தகங்களை பரிந்துரைப்பதாக சொல்லி, முதல் நாளுக்கு ’ஞானக்கூத்தன் கவிதைகள்’ தொகுப்பை பரிந்துரைத்து விடைபெற்றார் கமலஹாசன்..

  • சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

தொலைக்காட்சி நிரூபரை ஓட ஓட விரட்டி தாக்கும் ஐஏஎஸ் அதிகாரி… வைரல் வீடியோ!

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

26 ஆண்டுகால புகைக்கும் பழக்கம்… மீண்டது எப்படி? – எழுத்தாளரின் அனுபவப் பதிவு…

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

Admin

ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

Admin

இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

Admin

ரஜினிகாந்தாக மாறிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.. வைரல் வீடியோ

Admin

கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

Admin

Leave a Comment