கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அவருடைய மனைவி திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன். 2018 ஆண்டு ஜூன் மாதத்தில் நடராஜன் தனது பள்ளித் தோழியான பவித்ராவைத் திருமணம் செய்தார்.
நடராஜன் – பவித்ரா தம்பதியருக்கு அன்பிற்கு அடையாளமாய் கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் திருமண நாளை இருவரும் நேற்று கொண்டாடினார்கள். இதையடுத்து நடராஜனை புகழ்ந்து இன்ஸ்டகிராமில் பவித்ரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது. என் வாழ்க்கையின் காதலுக்கு திருமண நாள் வாழ்த்துகள் – என்று பவித்ரா கூறியுள்ளார்.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்