”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

SHARE

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சங்கல்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய பெண் பத்திரிகையாளர் ’யானா மிர்’ ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நான் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு பேசத்தொடங்கினார்.

மேலும், பாகிஸ்தானில் பெண் கல்விக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்ததற்காக 2012-ஆம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்டவரும், இளம் வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற கல்வி ஆர்வலரான மலாலா யூசுப்சாய் குறித்துதான் யானா மிர் அந்த காணொளியில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, ” நான் மலாலா யூசுப்சாய் அல்ல. ஏனெனில் நான் என் தாயகமான இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் சுதந்திரமாகவும் , பாதுகாப்பாகவும் இருக்கிறேன். ஒருபோதும் ஓடிப்போய் உங்கள் நாட்டில் அடைக்கலமும் தேட மாட்டேன். ஆகவே நான் மலாலா யூசுப்சாய் ஆக முடியாது. முன்னேறி கொண்டிருக்கும் என் தாயகத்தினை ஒடுக்கப்பட்டதாக கூறும் மலாலாவின் கருத்துகளை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.

சமூக ஊடகங்களில் மூலம் பரவும் இது போன்ற கருத்துகளை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். அதனை பரப்புகிறவர்கள் எங்கள் நாட்டிற்கு வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அடக்குமுறை குறித்தான கட்டுக்கதைகளை மட்டும் உருவாக்குகிறீர்கள். எனவே இந்தியாவை மதத்தின் அடிப்படையிலே பிரித்து பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள்.

பத்திரிகையாளர் யானா மிர்

இந்த நிகழ்ச்சியின் மூலம் இங்கிலாந்து , பாகிஸ்தானின் உள்ள அதவாது எங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் சர்வதேச மனித உரிமை மன்றங்களில் எங்களின் நாட்டை இழிவுப்படுத்துவதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன். எனவே இங்கிலாந்தில் அமர்ந்து கொண்டு இந்தியாவை பிளவுப்படுத்தும் முயற்சியை நிறுத்துங்கள். பயங்கரவாதம் போன்ற காரணங்களால் எங்களின் தாய்மார்கள் தங்களின் மகன்களை இழந்து ஏற்கெனவே வாடுகிறார்கள். ஆகவே எங்கள் காஷ்மீரை நிம்மதியாக வாழவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இவரின் அனல்பறக்கும் பேச்சு பலரின் கவனத்தினை பெற்றுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

யாரை பழிவாங்க இந்த கருப்பு உடை: நயன்தாரா உடைக்குப் பின் இப்படி ஒரு வரலாறா?

Admin

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… உலக சாதனை படைத்த பெண்..

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment