பெட்ரோல் விலை குறைப்பு … நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

SHARE

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி 2021-22 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார்.

அதில் இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. பெட்ரோல் வரி லிட்டருக்கு ரூ.7 உயர்த்தப்பட்டு இப்போது ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. நான் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அது மாநில அரசுகளின் முடிவு’ எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2016ஆம் ஆண்டு முதல் மற்றும் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களுக்கான இடையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அதிமுக அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு இரண்டு கட்டங்களாக ரூ.7 உயர்த்தியிருந்தது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்து வாதம் செய்தது. தற்போது திமுக அரசு அமைந்துள்ளது. மேலும், பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இதற்கு பெயர் நேர்மை. தந்திரம் அல்ல என தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

“இப்ப தெரியுதா திமுகன்னா என்னன்னு” – எஸ்.பி.வேலுமணியை அன்றே எச்சரித்த மு.க.ஸ்டாலின்

Admin

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’.. சங்கரய்யாவுக்குகமல்ஹாசன் வாழ்த்து!

Admin

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி… டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

‘‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்’’ : மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

Leave a Comment