அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் !

SHARE

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:

திமுக அரசு ஜெயலலிதாவின் பெயரை அழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் திமுக தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வு ரத்து என கூறி நீட்டுக்கு வேட்டு வைத்தனர்.

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாகவும் வாய்க்கு வந்த படி பல திட்டங்களை கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அதில் ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை என கூறினார்.

மேலும், திமுக தலைவராக கலைஞர் இருந்தபோதே அதுமுகவை அழிக்க தோப்புக்கரணம் போட்டு, பல வித்தைகளை காட்டினார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை.

அவரது தந்தையாலேயே முடியவில்லை. அவரது மகன் மு.க.ஸ்டாலினால் முடியுமா? இதற்கெல்லாம் அதிமுகவினர் பயந்தவர்கள் அல்ல. கடத்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதா?, திமுக ஆட்சிக்கு வந்ததும், கல்வெட்டுக்கள் அடித்து நொறுக்கப்படுகிறது, ஜெயலலிதா படம் அகற்றப்படுகிறது, அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்படுகிறது.

ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயர்களை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது, அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாதுஎன அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

ஓவைசி கட்சியினர் தாலிபான்கள் போன்றவர்கள் – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

Admin

“அப்பா அரசியல் ..மகன் விளையாட்டு” – ஆல்ரவுண்டராக கலக்கும் உதயநிதி குடும்பம்

Admin

கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Admin

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

1 comment

தமிழக அரசியல் நாகரிகம்... தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்? - Mei Ezhuththu September 2, 2021 at 10:33 am

[…] அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முட… […]

Reply

Leave a Comment