மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

SHARE

சென்னையில், மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று (04-03-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் அவர் ஆற்றிய உரையில், “வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே வைகுண்டர் தோன்றினார். சனாதன கோட்பாட்டின் அடிப்படையில், பாரதத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அவர்களது ஒற்றுமை, கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். ” என்று பேசினார்.

மேலும், “திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யூ. போப் மற்றும் கால்டுவெல் போன்றோர் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்கள். மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜி.யூ. போப் மற்றும் கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர்” என ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், தனக்கு இயேசுவையும், பைபிளையும் பிடிக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டுவிட்டருக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த மத்திய அரசு

Admin

பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

வணிக வரித்துறை புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை : அமைச்சர் மூர்த்தி தகவல்

Admin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டுவிட்டரில் புகழ்ந்த பவன் கல்யாண்.!!

Admin

நீட் தேர்வு பாதிப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

Admin

‘‘ஸ்டேன் சாமி மரணம்சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

Admin

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

Leave a Comment