நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்த நிலையில், அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் மேற்கொண்டு பிரசாரம் செய்வது தடைபட்டு உள்ளது.
மேலும் கடந்த சில தினங்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்தவர்களும் கொரோனா சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள செய்தியானது தமிழக அரசியல் களத்திலும், திமுகவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நமது நிருபர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்
1 comment
Excellent presentation. Keep it up..