ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பாக இன்று மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தபட்டது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது.
ஆகவே,தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு நேரக்கட்டுபாடு அமலில் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இன்றைய கூட்டத்தில் கொரோனா அதிகம் பாதித்திருந்த 11 மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்