தாலிபான்கள் தான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் .. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

SHARE

பேச்சு பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாத் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை தினமும் நிர்ணயிக்கப்படும் முறை அமலில் உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின் ராக்கெட் வேகத்தில் சென்ற பெட்ரோல் விலை இந்தியாவின் பல இடங்களில் கடந்த ஜூலை மாதம் ரூ.100ஐ கடந்து வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியளித்தது.

இதனிடையே கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் இந்தியாவின் எரிபொருள் விலை உயர்வின் பின்னணியில் தலிபான்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்களின் பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்து தான் உலகில் எரிபொருள் பற்றாக்குறை உருவானதாகவும், அதுவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்தது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அதேசமயம் எரிபொருளைப் பொருத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே பெரிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உறவு இருந்ததில்லை.

காரணம் இந்தியாவிற்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இடம்பெறவில்லை. எனவே அங்கிருக்கும் நிலைமை இந்தியாவில் எரிபொருள் விலையை பாதிக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

‘‘1000 ரூபாய்” யார் யாருக்கு தெரியுமா? விளக்கம் கொடுத்த நிதியமைச்சர்

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

வருமான வரித்துறை அதிரடி: சசிகலாவுக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

சாக்கடையில் தான் மலரும்… பாஜக ஆதரவாளரை விளாசிய நடிகர் சித்தார்த்…

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

‘யாரும் செய்யாததையா செய்தார்’ – கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவால் சர்ச்சை

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

Leave a Comment