நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

SHARE

திமுக எம்பி ஆ. ராசா நீட் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்றை காட்டி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசினை குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று அவையில் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

அவைக்கு வெளியே பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது எங்களை பேச அனுமதிக்காத காரணத்தால் நாங்கள் அவையில் இருந்து வெளியேறினோம். ஏற்கனவே நீட் தேர்வு குறித்து பல விவாதங்கள் நடைபெற்று உள்ளன.

முதல்வராக ஜெயலலிதா இருந்த போது தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தது.

இப்போது மீண்டும் தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளது. மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றிய அரசு திமுக அரசு. மாணவர்களை நம்ப வைத்து திமுக ஏமாற்றி உள்ளது எனக் குற்றம் சட்டினார்

மேலும் நாங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது. திமுக முன்னாள் அமைச்சர் ராஜா ஒரு கருத்தை தெரிவித்தார் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி போன் ஒன்றில். திமுக எம்பி ராசா பேசும் வீடியோ வினை கட்டினார்.

அதில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சாத்தியமே இல்லை என்று கூறும் அதிமுக தீர்மானம் கொண்டு வந்தது ஏன் , நீட் தேர்வை ஆதரித்துவிட்டு இப்போது ஏன் அதிமுக தீர்மானம் கொண்டு வந்தது என்று ஆ. ராசா கேள்வி எழுப்பிய பழைய வீடியோவை போட்டுக்காட்டிய எடப்பாடி பழனிசாமி , நாங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது அதை அயோக்கியத்தனம் என்று எம்பி ஆ. ராசா கூறினார். இப்போது வந்து எங்களுக்கு எதிராக பேசுகிறார்கள் எனக் கூறினார்.

மேலும், 2010 டிசம்பர் மாதம் காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் நீட் கொண்டு வந்தது. திமுகதான் அப்போது திமுக கூட்டணியில் இருந்தது திமுகதான் மக்களை ஏமாற்றியது, என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே சமயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

தலைவி படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

Admin

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

Admin

விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

Admin

இனி மனித கழிவுகளை அகற்ற மனிதர்கள் வேண்டாம்.. மாஸ் காட்டும் உதய நிதி.. குவியும் பாராட்டு!!

Admin

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி… மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Admin

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

தேர்தல் நடக்கும் ..பதவி ஏற்பு விழா நடக்கும் ..கிராம சபை மட்டும் நடக்காது : ம.நீ. ம. தலைவர் கமல்ஹாசன்

Admin

ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment