“அப்பா அரசியல் ..மகன் விளையாட்டு” – ஆல்ரவுண்டராக கலக்கும் உதயநிதி குடும்பம்

SHARE

நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி கால்பந்து தொடருக்கான அணி ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும்,சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையுடன் இருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

தாத்தா, பெரியப்பா, அப்பா, அத்தை என அனைவரும் அரசியலில் ஆளுமைகளாக வலம் வர இன்பன் உதயநிதியோ சென்னையிலுள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

கால்பந்தில் டிபெண்டர் ரோலில் பயிற்சி செய்து வரும் அவரை ஐலீக் தொடருக்காக நேரடியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியளவில் பிரபலமான ஐ லீக் தொடர் 2007 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் 21 கிளப் பணிகள் கலந்துகொள்வது வழக்கம்.

இந்தாண்டுக்கான தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளில் கிளப் அணிகள் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நெரோகா எஃப்சி அணி இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெரோகா அணி பதிவிட்டுள்ளது.

இந்த கிளப்பின் தலைமையிடம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்பன் உதயநிதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

புகைப்படத்துக்கா பஞ்சம்? திமுக – அதிமுக விளம்பரங்களில் காணப்பட்ட ஒரே புகைப்படத்தால் சர்ச்சை…

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

உதயநிதி ஸ்டாலின் வெற்றி செல்லாது.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Admin

Leave a Comment