’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

SHARE

பிரதமர் மோடி ஆட்சியில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று ட்விட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில் :

இந்தியாவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளை மூட உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது.

சென்னை மறைமலை நகரிலும் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள கார் தயாரிப்புப் ஆலைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் விற்பனை சரிவை நோக்கி சென்றதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது.

இந்தப்பத்திரிக்கை செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி ‘சண்டே தாட்ஸ்’என்ற ஹேஷ்டேக்கில் . ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் 4000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என தொழிற்துறையினர் கூறியிருக்கும் செய்தி அதில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து ராகுல் தனது பதிவில் :

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு, வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தது தான் மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி எனக் கூறியுள்ளார்.

மேலும், வேலையே இல்லாத போது அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன திங்கட்கிழமையாக இருந்தால் என்ன என்று பாஜக அரசை விமர்சித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலை

தலைவி படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

Admin

தலைவர்களை புகழ்ந்து பேச தடை போட்ட முதல்வர்… காரணம் என்ன?

Admin

சீமானும் ராகவனும் பெண்களுக்கு பேராபத்தை விளைவிப்பவர்கள் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசம்

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

Leave a Comment