9 – 11ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்

SHARE

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்விதத் தேர்வும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவித்து உள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்கு முந்தைய 10 மாதங்கள் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஜனவரியில்தான் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறத் தொடங்கின.

இந்த சூழலில் மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், சமீபத்திய பேரவைக் கூட்டத் தொடரில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 9 முதல் 11 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘9 – 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் பட்டியலை உருவாக்க வேண்டும்’  – என்று தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து தமிழகம் முழுக்க பள்ளி அளவிலான தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற செய்தி வேகமாகப் பரவியது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்திய  நிலையில், அதன் இயக்குநர் கண்ணப்பன் அவர்கள் இன்று விளக்கம் அளித்தார். அதில்,  தமிழகம் முழுக்க 9-11ஆம் வகுப்புகளுக்கு எந்தத் தேர்வும் நடை பெறாது எனவும், தஞ்சை முதன்மைக் கல்வி அலுவலர் தவறுதலாக வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறையின் இந்த திட்டவட்டமான அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வரவேற்பையும் பெற்றுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Admin

திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

Leave a Comment