இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

SHARE

“சுதா மூர்த்தி ஜியை இந்திய குடியரசுத் தலைவர் ராஜ்யசபாவுக்கு நியமித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகப் பணி, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா ஜியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது. அவர் ராஜ்யசபாவில் இருப்பது எங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். ‘நாரி சக்தி’, நமது தேசத்தின் தலைவிதியை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. அவரது நாடாளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்”
– இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இப்படி கணவன் – மனைவி இருவருமே பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் நிலையில்,  மகளிர் தினத்தன்று அவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று கிடைத்தது. அதாவது,   மாநிலங்களவை உறுப்பினராக இந்திய குடியரசு தலைவரால் சுதா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த சுதா மூர்த்தி?

இன்ஃபோசிஸ் இணை-நிறுவனருடைய மனைவி என்றுதான் சுதா மூர்த்தியை பலருக்கும் தெரியும். அவரைப் பற்றிய முழுமையான விவரங்கள் பின்வருமாறு :

சுதா மூர்த்தி,  ஒரு இந்திய எழுத்தாளரும், இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னாள் தலைவரும் ஆவார்.  சிறந்த பேச்சாளரும் கூட. பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய நாட்டின் உயரிய விருதுகளையும் சுதா மூர்த்தி பெற்றுள்ளார்.  கணவர் நாராயணமூர்த்தியை போன்று இவரும் பயிற்சி பெற்ற பொறியாளர். TELCO (Tata Engineering and Locomotive Company) நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் என்ற பெருமைக்கு உரியவர் சுதா மூர்த்தி.

பிரிட்டன் பிரதமரின் மாமியார்

நாராயண மூர்த்தி – சுதா மூர்த்தி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் அக்‌ஷதா மூர்த்தி, மற்றொருவர் ரோஹன் மூர்த்தி. இதில் அக்‌ஷதா மூர்த்தி,  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலகம் முழுவதும் பிரபலமான சுதா மூர்த்திக்கு,  மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது கூடுதல் சிறப்பு. எம்.பி. பதவி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய சுதா மூர்த்தி,  இதனை தனது பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு சேவை செய்வதற்கான இந்த வாய்ப்புக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.  இன்றைய அறிவிப்பு தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

தெலங்கானா பெண் எம்.எல்.ஏ. விபத்தில் பலி… 10 நாட்களில் 2ஆவது விபத்து

Pamban Mu Prasanth

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

டீசல் விலை ரூ.100 ஆக உயர்வு… வாகன ஓட்டிகள் அதிருப்தி…

Admin

தீபாவளிக்கு வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட் பார்சல்.. சிக்கலில் முன்னாள் அமைச்சர்!

Admin

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

Admin

அடிப்படை அறிவு இல்லாத ஆட்சியாளர்கள் தான் காரணம் .. கோபத்தில் காங்கிரஸ் தலைவர் !

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

Leave a Comment