முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

SHARE

மானுட வாழ்க்கையே இணைந்து வாழ்வது தான். கூடுவதே அமைப்பாதலின் தொடக்கநிலை. மனித சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் அமைப்புகளை உருவாக்கி அவ்வமைப்புகளோடு ஒன்றிணைந்து அமைப்புகளாலேயே இயங்குகிறது. மனிதன் – குடும்பம் – சமூகம் – சாதி – மதம் – இனம் – பொருளாதாரம் – அரசு என நாகரீகத்தின் ஒவ்வொரு படிநிலைகளிலும் அமைப்புகள் பரிணமிக்கின்றன. 

ஆயினும் அமைப்பாதல் அனைவருக்கும் சாத்தியமில்லை. எளியவர் பிரிந்து நிற்க வலியவர்கள் ஒன்றிணைந்து சுரண்டுவதே இதுவரை உலக வரலாறாக தொடர்கிறது. அதிகாரத்தை வென்றெடுக்க ஒடுக்குமுறையை எதிர்கொள்ள எளியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம். ஆனால் எவ்வாறு போராடுவது? எப்படி போராடுவது? மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது எப்படி? எத்தகைய அமைப்பாய்த் திரள்வது? ஏன் நாம் அமைப்பாய்த் திரளவேண்டும்? நாம் அமைப்பாய்த் திரள்வதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன? அமைப்பாய்த் திரண்ட பின் நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய செயல்திட்டங்கள் என்னென்ன? நம்முடைய இலக்கு என்ன? குறிக்கோள் என்ன? இலக்கை நோக்கிய பாதையில் நாம் சந்திக்கும் தடைக்கற்கள் என்னென்ன? அத்தடைக்கற்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? – ஆகிய கேள்விகளுக்கு பதிலாக, அமைப்பு உருவாக்கத்தின் அனைத்து படிநிலைகளையும் பரிணாமங்களையும் மிகத்தெளிவாகவும் ஆழமாகவும் விவரித்துள்ளார் முனைவர் தொல். திருமாவளவன்.

அமைப்பு உருவாக்கம் குறித்து பரந்த தளத்தில் விரிந்த நோக்கோடும் ஆழமான புரிதல்களோடும் வெளிவந்த முதல் தமிழ் நூலாக இதனைப் பார்க்கிறேன். ஓர் பல்கலைக்கழகத்தின் தலைமையில் பல்வேறு ஆளுமைகளை ஒன்றிணைத்து ஆய்வு செய்து எழுதி செய்து முடிக்க வேண்டிய வேலையை முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஒற்றை மனிதராக செய்து முடித்திருக்கிறார். இந்நூலை படித்த பின் திருமாவளவன் அவர்கள் குறித்து என் மனதில் நான் முன்னர் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் முற்றுமுழுதாக மாறிவிட்டது. தமிழ்ச்சமூகம் உச்சிமுகர்ந்து ஆரத்தழுவி கொண்டாட வேண்டிய ஓர் சிந்தனையாளர்தான் தொல். திருமாவளவன். திருமாவளவன் அவர்களின் முழு ஆளுமைத்திறனையும் தமிழ்ச்சமூகம் இன்னும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்கிற குறை என்னுள் தோன்றுகிறது.

புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை விட அவை சொல்லப்பட்ட விதம்தான் என்னை ஆச்சரியப்படுத்தியது. நூலின் ஒவ்வொரு கட்டுரையும் மிகுந்த செறிவான கருத்துக்களையும் கனமான சொற்களையும் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறன. வார்த்தைக்கு வார்த்தை சங்கிலி தொடர்பு போல் ஓர் கோர்வையாக தொடர்ச்சியாக வரிகள் நீளுகின்றன. இந்நூலின் உள்ளடக்கத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுரைகளின் தலைப்பை படித்தாலேயே இது உங்களுக்கு புரிய வரும். 

கட்டுரையின் முதல் வரியில்  இருந்து இறுதி வரி வரை அச்சங்கிலித்தொடர்பு எந்த ஒரு இடத்திலும் அறுபடவில்லை. மிகுந்த கவனத்தோடு இந்நூலை திருமாவளவன் அவர்கள் இயற்றியிருப்பதில் பார்க்கையில் தன் வாழ்வில் தமிழ்ச்சமூகத்திற்கு தான் ஆற்றிய பெருந்தொண்டாக இந்நூல் விளங்க வேண்டும் என்று கருதி அவர் இந்நூலை எழுதியிருக்கிறார் என்று புரிகிறது. ஓர் கட்சியின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினராக சமூகத்தின் பல்வேறு செயல்தளங்களில் ஒய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் இவரால் எப்படி ஓர் எழுத்தாளுமை மிக்க சிறந்த இலக்கியவாதி போல் இவ்வளவு நேர்த்தியாக எழுத முடிந்தது என வியப்பாக இருக்கிறது!

இந்நூலில், மேற்கோள் நூல்கள் (Reference) என்று எந்த நூல்களையோ இணையதளங்களையோ அவர் குறிப்பிடவில்லை. இந்நூல் முழுக்க முழுக்க அவருடைய கள அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டதாக தோன்றுகிறது. நூலில் வேறு சிந்தனையாளர்களின் மேற்கோள்கள் கூட இல்லை, ஆனால் பல புகழ்பெற்ற கருத்துகளின் தாக்கங்களைத் தனது கள அனுபவத்தில் இருந்து தொல்.திருமாவளவன் பதிவு செய்திருக்கிறார்.

இந்நூலில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள், செயல்திட்டங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டில் எந்த முற்போக்கு இயக்கமும் கட்சியும் (திருமாவளவன் அவர்களின் விசிக உள்பட) அவ்வாறு செயல்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. நான் உணர்ந்த வரையில் இந்நூலின் செயல்வடிவமாக விளங்கியது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே! இந்நூற்றாண்டில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து அமைப்பாக்கி தமக்கான சுதந்திர அரசாங்கத்தை கட்டமைத்து உலக அரங்கில் தமிழர்களை அதிகாரமயமாக்கிய ஓர் ஆகச்சிறந்த விடுதலை இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள்! இந்நூலின் ஒவ்வொரு கட்டுரைகளையும் படிக்கும்போது என் மனவோட்டத்தில் புலிகளே நடமாடுகிறார்கள்.

தமிழர் நலன், தமிழ்நாட்டு நலன், ஒடுக்கப்பட்டோர் நலன், உழைப்பாளர் நலன், சிறுபான்மையினர் நலன் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் சீர்த்திருத்தத்திற்கும் செயலாற்றும் முற்போக்கு இயக்கங்களும் கட்சிகளும் இந்நூலை அவசியம் படித்து தாங்கள் செயல்படும் பாதையை மேலும் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 520

விலை: ரூ. 325

– சந்திரன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

Pamban Mu Prasanth

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Admin

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

அனைத்து துறைகளிலும் அதிமுக ஊழல்… பாஜக மாவட்ட செயலாளர் பேச்சு

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

Admin

எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்… சபாநாயகர் அப்பாவு

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment