ஒருவருக்கு கொரோனா பாதிப்பு .. 3 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்திய பிரதமர்

SHARE

நியூசிலாந்து நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இருவருடங்களாக கொரோனா நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் போராடி அதனை கட்டுப்படுத்தி வருகின்றது. சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை பூஜ்யத்தில் உள்ளது.

அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வந்தது இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

இதனிடையே முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் 58 வயது நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆக்லாந்து மட்டுமின்றி நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக என அந்நாட்டின் பிரதமர் ஜெசிகா அறிவித்துள்ளார்.

லட்சக்கணக்கில் பாதிப்புள்ள நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே ஒருவருக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது உலக நாடுகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் புதிய அரசு.!!

Admin

‘குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான் நீங்கள்’ – பெண்கள் குறித்து தாலிபான்கள் சர்ச்சை கருத்து

Admin

வெற்றிகரமாக ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய அமேசான் நிறுவனர்!

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

தனிமையில் இருக்கிறீர்களா?.. ஆறுதல் சொல்ல வந்தாச்சு ரோபோ…

Admin

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டுத்தாக்குதல் !

Admin

Leave a Comment