விரைவில் முதலமைச்சராகிறாரா உதயநிதி? – சட்டப்பேரவையில் அமைச்சர் எவ. வேலு சூசகம்

SHARE

ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் இருந்ததுபோல, ராமனுக்கு அனுமன் இருந்தது போல திமுக ஆட்சியமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதற்கு பதிலளிக்கும் முன் பேசிய அமைச்சர் எ.வவேலு கே.ஆர்.ராமசாமி, பி.வி.நாராயாணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர், மு.க.ஸ்டாலின் வழியில் திரையுலகத்தில் திராவிட கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் நம்முடைய பிரச்னைகளையும் எடுத்துச் சொல்வதற்கும் நகைச்சுவை தென்றலாக உதயநிதி உலாவிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு

உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை சொல்லும் போதெல்லாம் தங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், திமுக திரையுலகில் பட்டுப்போய்விடுமோ என்று அஞ்சிய நிலையில் நமக்கு ஒரு திராவிட நடிகர் கிடைத்திருக்கிறார் என்று எ.வ.வேலு புகழ்ந்துள்ளார்.

மேலும் தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் பிரசாரத்திற்கு செல்ல முடியாத கிராமப்புற தொகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்து இன்று மேஜை தட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்தவர் உதயநிதி தான் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

திரையுலகில் இருந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானது போல மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி முதலமைச்சர் ஆகியுள்ளார்.

அந்த வழியில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிக்கிறார் என்று எவ.வேலு தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்… கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

Admin

’எய்ம்ஸ் போல இருக்காது’ வானதி ஸ்ரீனிவாசனை சட்டப்பேரவையிலேயே கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Pamban Mu Prasanth

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

‘கொங்குநாடு’கோரிக்கை: இலக்கிய ஆதாரத்தை தவறாக பதிவிட்ட வானதி சீனிவாசன் !

Admin

என்ன மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

Admin

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

Leave a Comment