எச்.ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்.. பாஜக மாநில தலைவர் எல்.முருகன்..சிக்குவாரா எச் ராஜா?

SHARE

எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்

ம பொ சிவஞானத்தின் 116வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் ம.பொ.சிவஞானத்தின் படத்திற்கு எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன்சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களை போற்றுவது பாஜகவின் வழக்கம், அந்த வகையில் ம.பொ. சிவஞானத்தை 116வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டதாக கூறினார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என கூறினார்.

தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மீது பாலியல் புகார் தொடர்பாக தனியார் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, பாஜகவில் அதுபோல் எந்த நிகழ்வும் நடக்க வில்லை எனவும் அது தொடர்பாக தனியார் பத்திரிகைக்கு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக எல் முருகன் கூறினார்.

அதே போல் எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அது குறித்து விசாரிக்கப்படும் என எல். முருகன் தெரிவித்தார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’.. சங்கரய்யாவுக்குகமல்ஹாசன் வாழ்த்து!

Admin

மீனவர்கள் தூக்கி சென்றது ஏன்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Admin

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

தேர்தல் தோல்விக்கு யார் காரணம்?முட்டி கொள்ளும்அதிமுக, பாஜக பிரமுகர்கள்!

Admin

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் !

Admin

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

Leave a Comment