வேலுமணி வீட்டு ரெய்டு பத்தி நான் எதுவுமே சொல்லவில்லை.. ட்விட்டர் பதிவுக்கு விளக்கமளித்த பாண்டியராஜன்!

SHARE

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்சஒழிப்புத்துறை சோதனை பற்றி தான் எந்த கருத்தையும் கூறவில்லை என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தலிருந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீட்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது அந்த வகையில்அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார். அவர்களின் சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களையும், முக்கிய கோப்புகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதே போல் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். கோவை, குனியமுத்தூரில் உள்ள சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை பல மணிநேரம் நடத்தப்பட்டது.

மேலும், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மூன்று பைகள் நிறைய ஆவணங்களும், முக்கிய கோப்புகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழக அர்சியலில் பரபரப்பை ஏற்படுத்த வேலூர் சரவணன் என்ற தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி தனது ட்விட்டர் பக்கத்தில், வேலுமணி போன்றவர்களை இந்த அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும். என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாக பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் தமிழ்த்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் வேலூர் சரவணனின் பதிவிற்கு கீழ், தயவு செய்து இந்த போலியான செய்தியை நிறுத்துங்கள். நான் இதுபோன்று சொல்லவே இல்லை”என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தான் இனி தன்னுடைய தொழிலில் 100 சதவீத கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதனால் அரசியல்வாதியாக ஊடகத்தின்முன்பு வரமாட்டேன் என்றும் கூறிருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இந்த 11 ஆவணங்களில் ஒன்று போதும்

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

மொட்டை போடுபவர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

Admin

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

கேரள முதல்வராக வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Admin

சுங்கச் சாவடிகள் இருக்காது… சுங்கக் கட்டணம் இருக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு.

Admin

Leave a Comment