ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

SHARE

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 என்றும் தெரிவித்துள்ளது.

வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்றும், அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது

.மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அக்டோபர் 6, மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

முதல் கட்டமாக 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டத்தில் 9 மாவட்டங்களில் 35 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார்.

வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என அறிவித்த அவர், வெப் ஸ்ட்ரீமிங் மூலம் தேர்வு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், வாக்குப்பதிவு காலை 7மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

வாக்குப்பதிவின் போது நான்கு வித நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் எனக்கூறிய அவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டுகளும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில்,அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Admin

“இப்ப தெரியுதா திமுகன்னா என்னன்னு” – எஸ்.பி.வேலுமணியை அன்றே எச்சரித்த மு.க.ஸ்டாலின்

Admin

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

‘‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்’’ : மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

Admin

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இன்று முதல் மாற்றம்..!

Admin

சிவசிங்கர் பாபா’வின் பக்தைகளுக்கு நிபந்தனை முன் ஜாமின்!

Admin

Leave a Comment