ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

SHARE

ட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு. எந்தவொரு புத்தகத்தின் முன்னுரையும் படிப்பது முதலில் அலுப்பு தட்டுவதாக இருக்கும். எதேச்சையாக இப்புத்தகத்தை முன்னுரையில் இருந்து ஆரம்பித்தேன், எதேச்சையாகத்தான். இதனை எழுதிய ஹாருகி முரகாமி பற்றி அதிக புகழ்ச்சி ஆஹா.. ஓஹோ என்று…

எழுத்தாளரை பற்றி ஒரளவு மட்டும் அறிவேன். ஆனால்,தமிழ் வாசக உலகை ஈர்க்கும் அளவிற்கு சரக்கு உள்ளதா..? எனது கேள்விக்கு நூலின் முதல் கதையே பதில் அளித்து விட்டது..!

ஆளுண்ணும் பூனைகள் – கதை:

மூடிய வீட்டில் மூன்று பூனைகளுக்கு உரிமையாளரான தனிமையிலிருக்கும் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் இறந்து விடுகிறார். வெளியே வர வழியில்லாத கொலைப்பட்டினி பூனைகள் வளர்த்த முதியவளின் சதையை பிய்த்துத் தின்ற நிகழ்வை / செய்தியை, அச்சாணியாக கொண்டு கதை நகர ஆரம்பிக்கிறது…

“அப்புறம் என்ன நடந்தது…?”

வாசித்து அனுபவியுங்கள். 

“இனிப்பு ” என்று சொல்ல முடியும் நீங்கள் தான் சுவைப் பார்க்க வேண்டும்.

கதையில் சில வரிகள் :

என்னைப் போலவே காணப்பட்ட ஒரு பொருத்தமான சவுகரியமான ஸ்தூலத்துக்குள் என் மூளை தப்பாக மாட்டிக் கொண்டு விட்டது….”

**” திரும்பிச் செல்லவே முடியாது. நான் தற்காலிகமாக கை கொண்டிருக்கும் இந்த தசைப் பிண்டம் சாந்து கலவையால் ஆனது போலவே இருந்தது. என்னை நான் சொரிந்து கொண்டால் விள்ளல் விள்ளலாக கழன்று விழுந்துவிடும். அடக்கமுடியாமல் நான் நடுங்க தொடங்கினேன்.”

**”என் உடம்பு களிமண் பொம்மை. சூனியக்காரன் ஒருவன் மூச்சுக்காற்றும் ஊதி உயிர் கொடுத்திருக்கும் ஒரு பில்லி சூனிய பொம்மை. நிஜ வாழ்க்கையின் தனல் இதில் இல்லை.”

உண்மையில் மனிதன் பூனைகள் நகரத்தில் தான் திரிந்து கொண்டிருக்கிறான். அப்படியா..? பூனைகள் நகரமா…? என்ற கேள்வி இருப்பவர்கள் வாசிக்கலாம் இதை.

என் தலைமுறைக்காக ஒரு நாட்டார் இலக்கியம்: பிற்கால முதலாளித்துவத்தின் ஒரு முன் சரித்திரம் – கதை:

 இளம்   சிறுகதை எழுத்தாளர்களுக்கான நுண் குறிப்புகளின் பொக்கிஷமடங்கிய கதையிது.

தேடுதல் – கதை:

விசித்திரம் ஏதுமில்லை . சாதாரணமான நிகழ்வுதான். ஆனால் அசாதாரணமான கதையாக்கியுள்ள யுக்தி  வியப்புக்குரியது.

ஷினாகவா குரங்கு – கதை:

இது மனிதர்களின் பெயரைத் திருடும் குரங்கு. இதனால் பாதிக்கப்பட்டவளின் விளைவு. புதுமையான களம்.

பூனைகள் நகரம் – கதை:

மனிதர்கள் யாரும் இல்லை. பொழுது சாய்ந்தால் பூனைகள் மட்டுமே வாழும் நகரம். தனது இரயில் பயணத்தில் திடீரென தனக்கு பிடித்தமான இடத்தில் எந்தவொரு முன் திட்டமும் இல்லாமல் இறங்கி  கொள்ளும்   ஒருவன் இங்கு மாட்டிக் கொள்கிறான். வாழ்க்கையும் இதுபோல்  மாயங்களில் தான் தொலைந்து போகிறது. கதையின் கட்டமைப்பு சாரம் ஆச்சரியப்படுத்துகிறது.

விநோத நூலகம் – கதை:

அருமையான புனைவில் சிறுவனாய் சிக்கிப்போய் தவிக்கிறேன். சிறப்பு.

ஸாம்ஸாவின் காதல் – கதை:

காதல் எங்கிருந்து பிறக்கிறது..? அதைக் காட்டும் கருவி எது..?

(சிரிப்பு) நீங்கள் இந்தக் கதையைப் படித்தப் பின்பு அடைப்பை உடைத்து உள்ளே உள்ள இந்த பெரும் சிரிப்பை கொணர்வீர்கள்.

மீனாகவோ சூரியகாந்தியாகவோ பிறக்க என்ணி இயலாமல் மனிதனாக பிறந்து விட்டால் அதுவும்  ஒரு இளைஞனின் உடலுக்குள் திடீரென புகுந்த உயிராக இருந்தால் .. ?  அது படிப்படியாக நிகழ்கிறது.

ஹாருகி முகாமி.. நீங்கள் ஆஹா ஒஹோ தான்..!

குஷிரோவுக்கு வந்த பறக்கும் தட்டு – கதை:

கொஞ்சம் சுமரான சாரம். ஆனால்,விவரிப்பில் விறுவிறுப்பு.கடைசி வரை  இழுத்துச் செல்கிறது.

ஹாருகி முரகாமி ஜப்பானின் சிறந்த எழுத்தாளர். சர்வதேச அடையாளம்.  எழுபதைக்  கடந்த அகவை. 50 மொழிகளில் மொழியாக்கப்பட்ட படைப்புகள். ஒவ்வொரு படைப்பும் பல மில்லியன் விற்பனை சாதனைகள். சில திரைப்படங்களாகவும் வந்துள்ளன.

இந்த நூலில் உள்ள படைப்புகள் நிஜத்திற்கும் நிழலுக்கும் நடுவே ஊஞ்சலாடுகின்றன. கதைகள்  பெரும்பாலும் முக்கிய கதாபத்திரத்தின் வாயிலாகவே விவரிக்கப்படுகின்றன. கதையாடல்களும் களங்களும் நமக்கு அந்நியமில்லாத நெருக்கமுடையவை.

வெகுஜனம் , இலக்கியம் என்பதையெல்லாம் கடந்து ஹாருகி முரகாமி எழுத்தாளனின் எழுத்தாளராக இருக்கிறார். இவரது எந்தவொரு   படைப்பும் அவரை  நிறைய  வாசிக்க  வசியம் விதைக்கிறது.

மொழிப்பெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி    அசாத்தியாமான ஜன்னல்களை திறந்து மாய உலகத்தை காட்டும் வித்தகர். வாசகன் தாவிக் குதித்தோட வேண்டும் அவ்வளவே.. அவருக்கு எனது அன்பான நன்றிகள்.

பக்கங்கள்: 300

வெளியீடு: வம்சி புக்ஸ்

விலை: 250

  • மஞ்சுநாத்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

3-வது திருமணத்துக்கு தயாரான பிரபல பாடகி..!!

Admin

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் – மதிப்புரை.

வெளியேறிய அமெரிக்கா கால்பதிக்கும் தாலிபன்கள்..யார் இந்த தாலிபான்கள் ? அவர்களின் நோக்கம் என்ன?

Admin

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

செல்போனை முழுங்கிய இளைஞர்… சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

வாய்க்கு போடும் பூட்டு.. உடல் எடையை குறைக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

Admin

Leave a Comment