பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் படங்களில் நடிக்க ஆசை… திருமாவளவனின் சினிமா காதல்…

SHARE

சினிமாவில் நடிக்க விரும்புவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் தன்னுடைய பிறந்த நாளையொட்டி புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என கட்சியினர் விருப்பப்பட்டதாகவும், தொடர்ந்து தொழில் முறை புகைப்படக்காரர்கள் மற்றும் கட்சியினர் வலியுறுத்தியதால் போட்டோ ஷூட்டிங்கிற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திரைப்படங்கள் மூலமாக உங்களுடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு ஏதாவது திட்டம் உள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு தன்னை 2 படங்களில் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க அழைத்தார்கள் என்றும், படப்பிடிப்பில் அவர்கள் சொல்லிக் கொடுத்தை செய்ததாகவும் திருமாவளவன் நினைவு கூர்ந்துள்ளார்.

இயக்குனர் களஞ்சியம் என்னை வைத்து படம் எடுப்பதாக கூறி தாடி வளர்க்கச் சொன்னார் என தனது தாடிக்கான ரகசியத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறிப்பிட்ட இயக்குநர் இயக்கத்தில், நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு நிறைய இயக்குநர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தற்கால இயக்குநர்களில் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் நல்ல தரமான படத்தை தருகின்றனர். எனவே குறிப்பிட்ட இந்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க விருப்பம் என மறைமுகமாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

அமித்ஷா பெரிய சங்கி… அண்ணாமலை சின்ன சங்கி… கலாய்த்த திருப்பூர் பாஜகவினர்…

Admin

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

Leave a Comment