சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது : பேரவையில் கடுப்பான அமைச்சர் செந்தில் பாலாஜி

SHARE

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கொரோனோ சமயத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த போது மின் கட்டணத்தை முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் மொபைலில் புகைப்படம் எடுத்து மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் அறிவித்தோம்.

ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு மே மாத கட்டணத்தை செலுத்த சொன்னதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறினார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இந்த கேள்விக்கு பதில் கூறிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி:

மின் கட்டணத்தை செலுத்த மக்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக கூறினார் . மேலும் மே மாதம் மின் உபயோகம் 32 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் குறைவாகவே கட்டணத்தை வசூலித்ததாக கூறினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் மிகை மாநிலமாக இருப்பதாக தெரிவித்த அதிமுக அரசு, ஏன் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகள் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

அதே சமயம் சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது. திட்டங்களை செயல்படுத்தினால் தான் பலன் அளிக்கும் என்று தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

அக்.31 வரை அரசியல், மத நிகழ்வுகளுக்கு தடை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

Admin

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

தீபாவளிக்கு வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட் பார்சல்.. சிக்கலில் முன்னாள் அமைச்சர்!

Admin

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

Leave a Comment