கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

SHARE

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

1968 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் வரும் நான் யார் நீ யார் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான புலமைப்பித்தன் சிவாஜி, ரஜினி, கமல் முதல் விஜய் விக்ரம், சூர்யா, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி உள்ளிட்ட தற்கால ஹீரோக்கள் வரை அனைவரது படத்திற்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவை கவிஞராக நியமிக்கப்பட்ட புலமைப்பித்தன் சட்டமன்ற உறுப்பினர் குழுவின் துணைத் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார்.85 வயதான அவருக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலமைப்பித்தனுக்கு செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரது உடல்நிலையை தொடர்ந்து டாக்டர்கள் குழு கண்காணித்து வந்த நிலையில் நேற்று சசிகலா நேரில் சந்தித்து அவரது குடும்பத்தாரிடம் புலமைப்பித்தன் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி புலமைப்பித்தன் காலமானார்.அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பித்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்..புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

Admin

நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

ரூ.1.3 கோடிக்கு கார்!: குக் வித் கோமாளி குழுவினர் குதூகலம்…

Admin

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

Admin

சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

ஆட்டோவில் செல்லும் அஜித்: இணையத்தைக் கலக்கும் வீடியோ

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment