மேட்ச் பிக்சிங் இல்ல பர்ச்சேஸ் பிக்சிங் செய்துள்ளது அதிமுக : சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்

SHARE

தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று ஈயம், பித்தளையாக மாறியதற்கு யார் காரணம் என்று எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கேள்வி எழுப்பினர்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக மின்வாரியம் அதானி குழுமத்திடமிருந்து மின்சாரத்தை ஒரு யூனிட் ஏழு ரூபாய் என்று ஏன் வாங்கப்பட்டது? மகாராஷ்டிராவில் 5 ரூபாய்க்கு வாங்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் ஏழு ரூபாய்க்கு வாங்கப்பட்டது? ‘மேட்ச் பிக்சிங்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் அதிமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதலில் பர்ச்சேஸ் பிக்சிங் நடந்துள்ளதாக கூறிய அமைச்சர் .

தங்கமாக இருக்க வேண்டிய தமிழக மின்சார வாரியம், ஈயம், பித்தளையாக மாறி பேரிச்சம்பழம் கடைக்கு போனதற்கு யார் காரணம்?” என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரின் செய்திக்கு , “ஆதாரம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பரந்தாமன், சிஏஜி அறிக்கையின் 2013- 2018 புத்தகத்தில் பாருங்கள். அதில் ஆதாரம் இருக்கிறது” என பரந்தாமன் விளக்கம் அளித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

3 முறை தற்கொலை செய்த ஓபிஎஸ் சசிகலாவுடன் செல்வார்: நாஞ்சில் சம்பத்

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

Admin

சாதியை ஒழிக்க உதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ 10 லட்சம் : முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

தீபாவளிக்கு வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட் பார்சல்.. சிக்கலில் முன்னாள் அமைச்சர்!

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.. நல்ல வேளை நான் பிழைத்தேன்.. செல்லூர் ராஜூ கிண்டல்!

Admin

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

Leave a Comment