‘ஊரை ஏமாற்றும் அண்ணாமலையே..ராஜினாமா செய்’- ஜோதிமணியின் காட்டமான அறிக்கை

SHARE

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிரான பாலியல் ரீதியிலான வீடியோ அரசியல் களத்தில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு இதனை சட்டப்படி சந்திப்பேன் என்றும், தர்மம் வெல்லும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பாக மாநில செயலாளர் மலர்க்கொடி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகியான மதன் ரவிச்சந்திரனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கே.டி.ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசியதாக கூறி மதன் ரவிச்சந்திரன் நேற்று வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க முடியாமல் தடுப்பது எது? பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுப்பது எது? சொந்த கட்சியிலுள்ள பெண்களிடமே பாஜக தலைவர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்கள், அதை அந்த கட்சியின் தலைவர் சிறிதும் வெட்கமும்,மனசாட்சியும் இல்லாமல் ஆதரிக்கிறார்.

இப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவலம் ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரம் அல்ல. பெண்களின் கௌரவம், கண்ணியம், பாதுகாப்போடு தொடர்புடையது. எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் நமது சகோதரிகளே. அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது மற்றும் தமிழக அரசின் கடமை.

எனவே தேசம்,தெய்வீகம் என்றெல்லாம் பேசி ஊரை ஏமாற்றிக்கொண்டிக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பெண்களை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்டு, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எச்.ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்.. பாஜக மாநில தலைவர் எல்.முருகன்..சிக்குவாரா எச் ராஜா?

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

‘‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்’’ : மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை ? பொங்கி எழுந்த புகழேந்தி

Admin

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

Leave a Comment