காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், ட்விட்டர் ஆபத்தான விளையாட்டு என்ற தலைப்பில் யூடியூப்பில் ராகுல் வீடியோ வெளியிட்டுள்ளார்
டெல்லியில் சிறுமி பாலியல் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அவர் பக்கத்தை ட்விட்டர் முடக்கியது மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும், அக்கட்சியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.
இந்த நிலையில் ட்விட்டர் ஆபத்தான விளையாட்டு என்ற தலைப்பில் யூடியூபில் ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் ட்விட்டர் நிறுவனம், இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும், காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயல்பாட்டில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ட்விட்டரில் தன்னை 2 கோடி பேர் பின் தொடர்ந்ததாகவும் அவர்களின் கருத்து சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள ராகுல் ட்விட்டர் என்பது நடுநிலையானது என்ற எண்ணத்தை அந்நிறுவனம் மீறிவிட்டதாகவும்,
ஆட்சியாளர்கள் சொல்வதையே அந்நிறுவனம் கேட்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்