இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

SHARE

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக் கொள்ளக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் தங்களை இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியற்றவர்கள் எனக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அச்சத்தை சிலர் உருவாக்க நினைப்பதாகவும், அதுபோன்ற தவறான பேச்சுக்களில் அவர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் இரு மதங்களுக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். ஒருபோதும் ஒற்றுமைக்கான பணியை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்து விடக்கூடாது எனவும் மோகன் பகவத் கூறியுள்ளார்.

அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணமே மனதில் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், பசுக்காவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவுக்கு எதிரானது என குறிப்பிட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

டெல்டா கொரோனா வேகமாக பரவ வாய்ப்பில்லை: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

Admin

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment