ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

SHARE

புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்? என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மத்திய அரசு விவரங்களை கேட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதனால் பள்ளி, கல்லூரிகள் தங்களது படிப்பை டிஜிட்டல் முறையில் கற்கின்றனர். தினமும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்க வைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து, ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? என்று மாவட்ட வாரியாக தகவல் திரட்டி ஒப்படைக்குமாறு சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க விரைந்து பட்டியலை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பட்டியல் கிடைத்த உடன், மத்திய, மாநில அரசின் நிதி உதவியைக் கொண்டு அரசுப்பள்ளி மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பணியில் சமக்ரா சிக்‌ஷா ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி? – பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குழப்பம்

Admin

கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

மேற்கு வங்க அரசியல்: 42 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி

Admin

Leave a Comment