கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

SHARE

அசாமில் கொரோனா பாதிப்புக்குள்ளான மாமனாரை மருமகள் ஒருவர் முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸுக்கு வயது 75. இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் மகன் சொந்த ஊரில் இல்லாத காரணத்தால் அவரை மருத்துவமனையில் சேர்ப்பது சிக்கலாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் அதிகமானதையடுத்து, மருத்துவமனைகள், கொரோனா படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.. அதுமட்டுமின்றி ஆம்புலன்ஸ் சேவைக்கும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரின் மருமகளான் நிகாரிகா மட்டுமே இருந்ததால் அவரை முதுகில் சுமந்தபடியே அருகில் இருக்கும் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் துலேஷ்வரை கொரோனா சிறப்பு வார்டுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அவரை தூக்கி வந்த நிகாரிகாவுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டு மருத்துவமனையில் அனுமதித்துளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதையடுத்து இணைவாசிகள் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

இன்று மட்டும் திடீரென்று அதிகரித்த கொரோனா இறப்பு விகிதம் ? காரணம் என்ன?

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

CBSE +2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Admin

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்… 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..?

Admin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு.. 25 நிமிடங்கள் பேசியது என்ன?

Admin

Leave a Comment