இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதையடுத்து ஹர்ஷவர்தன், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், சில அமைச்சர்கள் பதவி விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்