ஆந்திராவின் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டு உள்ளது. அங்கு நோயாளி ஒருவருடன் இருந்த நபர், சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த செவிலியரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.
இதை தட்டிக்கேட்ட அந்த செவிலியரிடம் நோயாளிகள் முன்னிலையில் மிகமோசமான முறையில் அத்துமீறிய அந்த நபர், சாவகாசமாக அங்குமிங்கும் நடந்து சென்றதோடு, தன்னை யார் என்ன செய்ய முடியும் என காலியாக இருந்த படுக்கையிலும் திமிராக படுத்துக் கொண்டிருந்தான்.
கொரோனா வார்டில், தன்னலம் கருதாது சிகிச்சை அளித்த செவிலியரிடம், அந்த நபர் அத்துமீறியபோது ஒரு சிலர் விலக்கி விட்டனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட செவிலியர் கூடியிருந்தவர்களிடம் முறையிட்டபோது, அந்த நபரை நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பின்னர் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் செவிலியரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்று, விஜய்குமார் என்ற அந்த குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!