இந்தியாவில் கொரோனா தடுப்பு பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போதைய தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே அமைந்துள்ளதால், அவற்றை அனைவருக்கும் செலுத்தும் பணியில் மத்திய,மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஸ்புட்னிக் வி உள்ளிட்ட சில தடுப்பூசிகளும் அடுத்தடுத்து பயன்பாட்டுக்கு வர உள்ளன.
டாக்டர் ஏ.கே.சிங் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வுக்காக 515 சுகாதார ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இதனை மருத்துவத்துறையினர் ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- மூவேந்தன்