கூட்டத்தில் இருந்த தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்

SHARE

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ஆய்வு செய்வதற்காக சென்றார்.

அப்போது அங்கு இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் அவர் மீது கை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த நபரை கன்னத்தில் அறைந்ததாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக பாஜக அமைச்சர் சிடி ரவி, “கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவக்குமார் தன்னுடைய கட்சி நபர் ஒருவரை பொதுவெளியில் அறைந்துள்ளார்?

வன்முறை செயல்களில் ஈடுபட சிவக்குமாருக்கு ராகுல் காந்தி முழு சுதந்திரம் அளித்துவிட்டாரா என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பலரும் டி.கே.சிவக்குமாரின் செயல்பாட்டை கண்டித்து வரும் சூழலில் அடி வாங்கிய நபர் சரியாக கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததால் தான் அவரை அறைந்ததாக டிகே சிவக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வீடியோ எடுத்த நபரை அதை அழிக்குமாறு டிகே சிவக்குமார் கேட்டு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

விமான நிலையத்தின் பெயர் மாற்றம்… அதானி பெயர் பலகை உடைப்பு

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

Admin

Leave a Comment