வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

SHARE

ஐபிஎல் லீக்கின் நேற்றைய போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அகமதாபாத்

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், பவுலிங்கை தேர்வு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் காயம் காரணமாக அமித் மிஷ்ராவிற்கு மாற்றாக லலித் யாதவை அணியில் சேர்த்திருந்தார்கள். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் இல்லை. 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக

களம் இறங்கினர் ராணா மற்றும் கில். ஆரம்பமே சரியாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும், முதல் மூன்று ஓவர்களுக்கு சிங்கிள்ஸ் மட்டும் உருட்டிக்கொண்டிருந்த ராணா, 4 வது ஓவர் அக்‌ஷரின் பந்தில், அவுட்டாகி சென்றார். அடுத்து வந்த ராகுல் த்ரிப்பாட்டி,  மற்றும் கில் கூட்டணி மெதுவாக ஆட ஆரம்பித்தனர். இவர்களை ஆடவே விடக்கூடாது, விக்கெட் எடுத்தாக வேண்டும் என்று வந்தார்கள் ஆவேஷ், இஷாந்த், அக்ஷர், லலித். ஒன்றும் எடுப்படாமல் போகவே, ஸ்டாய்னிஸிடம் சென்றார் பந்த். சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தூக்கி அடித்த பந்து நேராக லலித் கையில் போய் அமர்ந்தது. 19 ரன்களில் அவுட்டாகி சென்றார் த்ரிப்பாட்டி. 

இதில் ஆரம்பித்தது கொல்கத்தாவின் சறுக்கல். 11ஆவது ஓவருக்கு வந்தார் லலித் யாதவ். ஸ்ட்ரைக்கில் மோர்கனும் கில்லும். மோர்கன் தூக்கி அடித்த பந்து லாங் ஆஃப்பில் சென்று ஸ்மித்தின் கையில் கேட்ச் ஆனது. அதே ஓவரில் அடுத்து வந்த நரைன்,  ஸ்டம்ப்பில் பட்டு அவுட்டாகி சென்றார். 13ஆவது ஓவரில், ஆவாஷ் கானின் பந்தில் தூக்கி அடித்து, அதுவும் ஸ்மித்தின் கையில் சென்று கேட்ச் ஆனது. அடுத்து ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் கூட்டணி சேர்ந்தனர். ஆட்டத்தின் 16ஆவது ஓவரில் சிக்ஸர் அடித்து, ஐபிஎல் டி20யில் 6000 ரன்களை கடந்தார் ரஸல். அடுத்து தினேஷ் கார்த்திக் அக்‌ஷர் பந்தில் எல்பிடபிள்யூ வில் அவுட்டாகி சென்றார்.   கடைசி இரண்டு ஓவர்களில் ரஸலும் கம்மின்ஸும் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளை தட்டிஅர், ஆட்டத்தின் கடைசி பந்திலும் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார் ரஸல். 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து நாட் அவுட்டில் இருந்தார் ரஸல். இறுதியில் மொத்தம் 154 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா அணி. 

அடுத்து ஆட வந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. டாஸில் வென்ற போதே சேஸிங் செய்வது தங்களுக்கு வசதியாக இருப்பதாக கூறினார் பந்த். அதே போல் ஆட்டமும் அமைந்தது. வேகத்துடன் ஆட வந்தனர், ப்ரித்வி ஷா மற்றும் தவன். ஓபனிங்கே அமர்க்களமாக ஆரம்பித்தார் ப்ரித்வி ஷா. முதல் ஓவர் மாவியின் பந்தில், மிட் விக்கெட் ஏரியா, கவர்ஸ் ஏரியா, ஸ்கொயர் லெக் ஏரியா என்று பாரபட்சம் இல்லாமல் 6  பந்துகளும் பவுண்டரிகளை விளாசி தள்ளினார். முதல் ஓவருக்கு 25 ரன்கள். அடுத்தடுத்து வந்த ப்ரசித் கிருஷ்ணா, வருண், நரைன் என்று யாருடைய பந்தையும் பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கினார்கள் தவனும் ப்ரித்வி ஷாவும். 4ஆவது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. 8ஆவது ஓவரில் அடித்த பவுண்டரியுடன், தன் அரை சதத்தையும் கடந்தார் ப்ரித்வி ஷா. 18 பந்துகளில் 50 ரன்கள். இந்த ஃபார்ட்னர்ஷிப் 13வது ஓவர் வரை சென்று 123 ரன்கள் எடுத்தது. 14 வது ஓவரில் கம்மின்ஸின் பந்தில் எல்பிடபிள்யூவில் வெளியேறினார் தவன். விக்கெட் வீழ்ந்ததில் டெல்லி அணிக்கு கவலையே இல்லை, ஏன்னென்றால் ஆட்டம் அவர்களின் வசம்தான் இருந்தது. ஆனால் வேகம் இருந்த அளவுக்குப் பொறுமை இல்லை. சீக்கிரம் ஆட்டத்தை முடிக்க வேண்டும்  என்று தூக்கி அடித்து அவுட்டானார்கள் ப்ரித்வி ஷாவும், பந்த்தும். ஒரே ஓவரில் 2 விக்கெட் கிடைத்தது கம்மின்ஸுக்கு. கடைசியில் ஸ்டானிஸ் அடித்த பவுண்டரியில் ஆட்டம் முடிந்து டெல்லி அணி வெற்றி பெற்றது. 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த ப்ரித்வி ஷா ஆட்ட நயகன் ஆனார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது இடத்தை டெல்லி அணி பெற்றது. கடந்த ஆட்டத்தில் பெங்களூருவிடம் ஒரே ரன்னில் தோற்ற டெல்லி அணிக்கு இந்த வெற்றி மிகப் பெரிய ஆறுதல்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

என் இனிய பானிபூரி..திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்!

Admin

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

மயங்கி விழுந்த நட்சத்திர வீரர்..நிறுத்தப்பட்ட யூரோகால்பந்து போட்டி!

Admin

மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

தங்க மகனுக்கு எஸ்யுவி கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

Admin

கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment