கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

SHARE

கங்கை நதியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கங்கை நதியில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி நதியில் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து கரையோரங்களில் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் நீரில் மிதக்க தொடங்கின.

இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.இந்த சம்பவம் பெரும் பேசும் பொருளாக மாறியது. இதனையடுத்து கங்கை நீதி கொரோனா வைரஸ் பரவி இருக்கிறதா என ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி தேசிய கங்கை தூய்மை திட்ட இயக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கங்கை நதியின் மாதிரியை சேகரித்து ஆய்வு நடத்தியது.

இதில் கங்கை நதியில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

இந்த வயசுகாறவங்க கொரோனா தடுப்பூசி போட தயங்குறாங்க வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு.. 25 நிமிடங்கள் பேசியது என்ன?

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment