சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

SHARE

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, திருக்குறளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 6.30 மணிக்கு யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இன்று சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. ‘ஆரோக்கியத்திற்கு யோகா’ என்பது தான் இந்தாண்டின் கருப்பொருள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதாக கூறிய பிரதமர் மோடி இந்த கொரோனா காலகட்டத்தில் யோகா புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துவதாக கூறினார்.

மேலும், தெய்வப் புலவர் திருவள்ளுவர், நோய் நாடி முதல் நாடி அது தணிக்கும்வாய் நாடி வாய்ப்பச் செயல் எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஒரு நோயின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து நாம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

அதே போல் கண்ணுக்கு தெரியாத கொரோனா தொற்றை வெல்ல நாம் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும்.

மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் யோகாவை தங்களின் பாதுகாப்பு ஆயுதமாக கடைப்பிடிக்க வேண்டும். நாம் அனைவரும் யோகா செய்வதன் மூலம் நாம் கோவிட் தொற்றிலிருந்து மீள முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் சிலிண்டர் விலை அதிகரிப்பு… 1000 ரூபாயை நோக்கி சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் மக்கள்…

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் .. சாத்தியமற்றது – மத்திய அரசு

Admin

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

50 பேருக்கு மேல் கூட கூடாது.. குர்பானி கிடையாது.. யோகி போட்ட அதிரடி தடை..

Admin

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

Leave a Comment