திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

SHARE

தமிழக சட்டப்பேரவையின் 16ஆவது கூட்டத் தொடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடியது. அந்த கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டத் தொடரில் கலந்து கொண்டனர். ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது.

சட்டப்பேரவைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை சரமாரியாக முன்வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் 550 வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றுகூட இன்றைய ஆளுநர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து விட்டு இன்று அதை பற்றி விசாரிக்க குழு அமைக்கபட்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
 
திமுக ஆட்சி அமைந்து 45 நாட்கள் ஆகிறது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் ரத்து பத்திரம் வழங்கபடவில்லை
மாணவர்கள் வாங்கிய கல்வி கடந்த ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். அதுகுறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை.
 
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த அறிவிப்பு குறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை என சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார் எடப்பாடி பழனிசாமி.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி பதில்

Admin

இனிமே மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவுக்கு ரூ.600 இல்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Admin

அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Admin

Leave a Comment