கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியது வரலாம் என எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதேசமயம் கொரோனா வேகமாக உருமாறி வருவதால் இந்தியாவில் மூன்றாம் அலைக்கான பாதிப்பும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர், இந்தியாவில் உருமாற்ற கொரோனா அதிகரிப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளோடு நிறுத்தாமல் மூன்றாவது டோஸ் போட வேண்டிய தேவை ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்