இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

SHARE

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், , ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பக்தர்கள் இன்று முதல் நெகிழிப் பொருட்கள் எடுத்து செல்லக் கூடாது. இந்த உத்தரவை திருப்பதி தேவஸ்தானம் பிறப்பித்துள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!
இதனை தீவிரமாக செயல்படுத்தும் வகையில் திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்கள், தனிநபர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் முழுமையாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல திருமலையில் உள்ள கடைகளில் இனி பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மட்கும் அல்லது காகித அட்டைகள் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி குப்பைத் தொட்டிகளில் போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அல்லாத கவர்கள் வழங்குவதற்காக பக்தர்களிடம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருக்க, கடைகளின் முன் கட்டண அறிவிப்பு பலகைகளை நிறுவப்பட்டு வருகின்றன. மேலும் திருப்பதியில் கடை வைத்திருப்பவர்கள் விற்க உரிமம் பெற்ற பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை குறிப்பிட்ட இடைவெளியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விஜிலென்ஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் தடை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

உணவு எடுத்துக் கொள்ளுதலின் 4 வகைகள்: கீதை சொல்வது என்ன?

Admin

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் ஏன் தெரியுமா?

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

Leave a Comment