சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 7: தொழிற் கை முத்திரையின் வகைகள் (17 – 20)

SHARE

நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 16 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம்

17. சிகர ஹஸ்தம்:

பெருவிரல் தவிர மற்ற விரல்களை ஒரு சேர மடக்கி பிடித்து பெருவிரலை செங்குத்தாகப் பிடித்த நிலை. வில்லை பிடிப்பதால் இது விற்பிடி எனலாம்.

வில் போன்ற ஆயுதங்கள் இம்முத்திரையில் பிடிக்கப்படும்.

18.,பூ ஸ்பரிச ஹஸ்தம்:

பல்லவ முத்திரையுடைய கையினை பூமியை தொடுமாறு பிடித்தல். புத்தர் படிமத்தில் காணலாம். புத்தர் பூமியைத் தொட்டு உணர்த்திய நிலை.

19. கடி ஹஸ்தம்:

கடி என்றால் இடுப்பு.

படிமங்கள் தங்களது இடக்கரத்தை இடுப்பில் வைத்தவாறு அமையும் முத்திரை இதுவாகும்.

இம்முத்திரை படிமங்களுக்கு கம்பீரத்தை தருகிறது.

கைத்தலத்தையும் விரலையும் விரித்து கட்டை விரலை இடுப்பில் ஊன்றி மற்ற விரல்களை ஒன்றோடொன்று சேர்த்து இணைத்து இடுப்பில் படியுமாறு வைத்து சிறுவிரலயும் சுட்டுவிரலையும் உடலில் இருந்து கிளப்பிய வடிவம் இதுவாகும்.

20. ஊரு ஹஸ்தம்:

ஊரு என்றால் தொடை.

கையை கீழ்நோக்கி நேராக நீட்டி கைத்தலத்தையும் விரல்களையும் தொடைமீது பொருத்தி மென்மையாக ஊன்றியிருக்கும் முத்திரை இதுவாகும். 

நடுவிரலும் அணி விரலும் தொடையில் பதிந்து சுட்டுவிரலும் சிறுவிரலும் தொடையை விட்டு நீங்கி இதமாக வளைந்து கட்டை விரலானது மற்ற விரல்களிருந்து விலகி தொடையோடு பொருந்தியிருக்கும். நின்ற கோல விஷ்ணு படிமம் மற்றும் கந்தன் படிமங்களில் இதனைக் காணலாம்.

தொடரும்…

  • மா.மாரிராஜன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள் 12: ‘எல்லாம் நாடகம்!’

இரா.மன்னர் மன்னன்

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

ஜிப்ஸிக்கள் மகிழ்ச்சியாக இல்லை – மகசூல் -பயணத்தொடர் – பகுதி 11

Pamban Mu Prasanth

கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 6

Pamban Mu Prasanth

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 11. 4 வகை எழிற்கை முத்திரைகள்

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

Leave a Comment