ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

SHARE

நாடெங்கும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கேரளா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன் நிற்கிறது. தற்போது கேரளத்தில் ‘ஆக்சிஜன் வார் ரூம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கேரளா

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், நம் அண்டை மாநிலமான கேரளா போதுமான அளவு ஆக்ஸிஜனை முன்கூட்டியே திட்டமிட்டு கையிருப்பு வைத்து நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது.  கொரோனாவின் முதல் அலையிலேயே கேரளா கூடுதல் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி விட்டதாகவும் தேவையான அளவு கையிருப்பு இருப்பதை தொடர்ந்து உறுதி செய்து வந்ததாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 

தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள, தேவையான ஆக்ஸிஜன் கேரள மருத்துவமனைகளிலும் உள்ளதாகவும். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் முன்கூட்டியே கேட்டு வைத்துள்ளதாகவும் கேரளி சுகாதாரத்துறை அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

தற்போது ஆக்ஸிஜன் சப்ளையை ஒழுங்கு படுத்துவதற்காக, “வார் ரூம்” என்ற புதிய அமைப்பை கேரள அரசு பல்வேறு மாவட்டங்களில் திறந்து உள்ளது. கிட்டத்தட்ட 80 இடங்களில் இத்தகைய சிறப்பு வார் ரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆக்ஸிஜன் இருப்பு எவ்வளவு உள்ளது, எங்கு எவ்வளவு தேவை? – என்பதை கேரள அரசு வரையறுத்து திட்டமிட்டு செயல்படுத்த முடியும்.

முன்னதாக கர்நாடக அரசு ஆக்சிஜன் வார் ரூம்களை திறந்த நிலையில், அந்தத் திட்டத்தைக் கேரள அரசு தற்போது இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தி உள்ளது. இதனைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

  • பிரியாவேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

Leave a Comment