காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

SHARE

தெலுங்கானாவில் கார் ஷோரூமில் புது காருடன் மாடியில் இருந்து பாய்ந்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலம் ஆல்காபோரில் உள்ள டாடா ஷோரூமுக்கு புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் எல்.ஐ.சி ஊழியர் பி.பகவத்,(59) சென்றார்.

ரூ.6.40 லட்சத்தில் தனக்கு பிடித்தமான காரையும் தேர்வு செய்தார். அந்த கார் ஹைட்ராலிக் லிப்ட் மூலம் முதல் தளத்தில் இருந்து தரைதளத்திற்கு இறக்குவதற்கு தயாராக இருந்ததது. தான் புதியதாக வாங்கிய காரில் பி.பகவத் ஏறி அமர்ந்து இருந்தார்.

அப்போது பகவத் எதிர்பாராதவிதமாக தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தி விட்டார். இதனால் அதிவேகமாக சென்ற கார் முதல் மாடியில் இருந்து அப்படியே கீழே விழுந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ஊழியர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

நல்லவேளையாக அங்கு இருந்த நபர்கள் பகவத்தினையும் அவருடன் இருந்த ஊழியரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கார் விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேகதாது அணை விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

Admin

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

மீண்டும் சிலிண்டர் விலை அதிகரிப்பு… 1000 ரூபாயை நோக்கி சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் மக்கள்…

Admin

குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா? ரெம்டெசிவர் பாதுகாப்பானதா? விளக்கம் கொடுத்த மத்திய அரசு

Admin

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

Leave a Comment